அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளின் போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று ஐந்தாவது நாளாக தொடர்கிறது.
நேற்றைய தினம் செருப்பால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தை நடத்திய விவசாயிகள், இன்று வங்கிக்கடன் வாங்கிய விவசாயி ஒருவர் தற்கொலை செய்ததன் நினைவாக துடைப்பானால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தை நடத்தினர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா குலக்குடி என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் என்கிற இவர் வங்கி கடன் வாங்கியிருக்க வங்கி மேலாளர் கடனை திருப்பிச் செலுத்தக்கூறி திட்டியதால் மன உளைச்சலில் இறந்ததாக சொல்லப்படுகிறது.
இதையொட்டி தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினர் இன்று இந்த சம்பவத்தைக் கண்டித்து துடைப்பானால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தை நடத்தினார்கள். இதில் டி.ராஜா எம்.பி. கலந்து கொண்டு விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார்.