சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடம் தெலுங்கு தேசம் கட்சி மோசமான தோல்வியை தழுவி மாநிலத்தில் ஆட்சியை பறிகொடுத்ததுடன், மொத்தம் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் 3ல் மட்டுமே வெற்றி பெற்றது.
175 சட்டமன்ற தொகுதிகளில் 151 தொகுதிகளில் YSR காங்கிரஸும், 23 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியும் வென்றன.
YSR காங்கிரசின் அபார வெற்றியை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான திவாகர் ரெட்டி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் அனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையில், அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்தார்.
மேலும் அபார வெற்றி பெற்ற முதல்வர் ஜகன்மோகன் ரெட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அவர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தை ஜெகன் மோகன் ரெட்டி நிச்சயமாக பெற்றுத்தருவார் என நம்புவதாக கூறினார். தேர்தல் நேரத்தில் ஜகனை அரசியல் ரீதியாக நான் தாக்கு பேசியிருந்தாலும் அவர் மீது தனிப்பட்ட வெறுப்பு ஏதும் இல்லை என்றார். ஜெகனின் தந்தை மறைந்த ராஜசேகர ரெட்டி அவரது நீண்ட கால நண்பர் என்றும் குறிப்பிட்டார்.
ஜெகன்மோகன் ரெட்டியை புகழ்ந்து பேசினாலும் அவரது கட்சியில் நிச்சயம் இணைய மாட்டேன் என்று அழுத்தமாக குறிப்பிட்டார் திவாகர் ரெட்டி.
ஜெகன்மோகன் ரெட்டியை புகழ்ந்து பேசினாலும் அவரது கட்சியில் நிச்சயம் இணைய மாட்டேன் என்று அழுத்தமாக குறிப்பிட்டார் திவாகர் ரெட்டி.