வியாழன், 14 டிசம்பர், 2017

​குடியரசு தின விழாவுக்கு 10 நாட்டு தலைவர்கள் வருகை! December 14, 2017

Image

டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் ஏசியான் அமைப்பை சேர்ந்த 10 தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.

சென்ற மாதம் நடைபெற்ற ஏசியான் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, குடியரசு தின விழாவிற்கு வருமாறு ஏசியான் தலைவர்களை அழைத்திருந்தார். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் அவர்களின் வருகைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வரும் ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் ஏசியான் அமைப்பை சேர்ந்த 10 நாட்டு தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ப்ரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

இதனையொட்டி, இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கிடையேயான உறவை வெளிப்படுத்தும் விதமாக  ஊர்தி ஒன்று அணிவகுப்பில் பங்கேற்கும் எனவும் கூறப்படுகிறது.