திங்கள், 11 டிசம்பர், 2017

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கடும் எதிர்ப்பு! December 11, 2017

Image

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், 'ஓகி' புயலில் சிக்கி காணாமல் போன மீனவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

'ஓகி' புயலில் சிக்கிய மீனவர்களை மீட்பதில் அக்கறை காட்டவில்லை எனக் கூறி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மீனவர்களின் போராட்டம், நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், புயலில் சிக்கி மாயமான குளச்சலைச் சேர்ந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக, மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் சென்றார். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் பொன் ராதாகிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.