சனி, 10 பிப்ரவரி, 2018

உயிருடன் இருக்கும்பொழுதே இறந்ததாகக்கூறி 6 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் மோசடி! February 10, 2018

Image

டெல்லியில் இன்சுரன்ஸ் காப்பீடுத் தொகை  பெறுவதற்காக கணவன் இறந்ததாக கூறி ஆட்டோ ஓட்டுநரின் மனைவி, ரூபாய் 16 லட்சம் மோசடி செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோ டிரைவரான ஜிதேந்திர சிங், நோயின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர், ஆறு நிறுவனங்களில் இன்சூரன்ஸ் செய்து வைத்திருந்தார்.  

இந்நிலையில், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து காப்பீட்டுத்தொகையை பெற எண்ணிய அவரும் அவரது குடும்பத்தாரும், சட்ட விரோதமாக இறப்புச்சான்றிதழ் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை பெற்று, அதனை இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் சமர்பித்து, 16 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

பஜாஜ் நிறுவனத்தில் ஜிதேந்திர சிங்கின் மனைவி இன்சூரன்ச் காப்பீட்டுத்தொகைக்காக சான்றிதழ்களை சமர்ப்பித்த பொழுது சந்தேகமடைந்த பஜாஜ் நிறுவனம், இதுகுறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஆவணங்களை சரிபார்த்த பொழுது, போலி இறப்பு சான்றிதழ் பெற்றது, போலீசார்க்கு தெரியவந்தது. இதனையடுத்து, இந்த மோசடிக்கு உதவியாக இருந்த மருத்துவர் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தப்பியோடிய இரண்டு குற்றவாளிகளை, போலீசார் தேடிவருகின்றனர். மேலும், சிறப்பு விசாரணைக் குழுவினரிடம் இச்சம்பவம் குறித்து விசாரிக்குமாறு, போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மருத்துவர் அளித்த அனைத்து பிரேத பரிசோதனை அறிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் மிஸ்ரா தெரிவித்தார்.

Related Posts:

  • காந்தியாரைப் படுகொலை செய்த தத்துவம் ஆட்சித் தத்துவமாக மாற வேண்டுமா? மாற்றுடையில் கோட்சே பட்டாபிஷேகம்! http://goo.gl/yySZL3காந்தியாரைப் படுகொலை செய்த தத்துவம் ஆட்சித் தத்துவமாக மாற வேண்டுமா? காந்தியைப் படுகொலை செய்த கோ… Read More
  • Bottled Water - cancer !!!! LET EVERYONE WHO HAS A WIFE/GIRLFRIEND/ DAUGHTER/ FRIENDS AND COLLEAGUES.  KNOW PLEASE!  Bottled water in your car is very dangerous!… Read More
  • அறியாமல் இருப்பது தான் தவறு.. சகோதரர்களே இந்த செய்தியை அதிகம் அதிகம் ஷேர் செய்யுங்க!உங்கள் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா..?காலாவதியான ச… Read More
  • Hadis நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவியர்களுக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவையும், அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்… Read More
  • ரூபாய் 10 லட்சம் அறிவிப்பு மவ்ளுது அபிமானிகளே - மவ்ளுது பாடல்களுக்கு குரான் மற்றும் ஹதிஸ்களில் இருந்து ஆதாரத்தை காட்டினால் ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும். TNTJ - முபட்டி கி… Read More