சனி, 10 பிப்ரவரி, 2018

ஔரங்கசீப் சாலையின் பெயரை மாற்றிய பா.ஜ.க எம்.பிக்கு விருது! February 10, 2018

Image
டெல்லியில் உள்ள ஔரங்கசீப் என்ற சாலையின் பெயரை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலை என்று பெயர்மாற்றம் செய்ததற்காக பா.ஜ.க எம்.பி மகேஷ் கிர்ரிக்கு  தைரியத்திற்கான சிவாஜி விருது வழங்கப்பட்டுள்ளது. 

இந்திரா காந்தி கலை தேசிய மையத்தில் நேற்று (09.02.18) கலாசார கூட்டு முன்னேற்றத்திற்கான அறக்கட்டளை நடத்திய கருத்தரங்கு கூட்டத்தில் பா.ஜ.க எம்.பி மகேஷ் கிர்ரிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

ஒவ்வொரு முறை அந்த சாலையை கடக்கும்பொழுது நம் கலாச்சாரத்தை பாழாக்கி, நிறைய உயிர்களை கொன்ற ஔரங்கசீப்பின் பெயர் வைக்கப்பட்டிருப்பது தனக்கு மனதளவில் காயத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார் மகேஷ் கிர்ரி.

மேலும்,  நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த அப்துல் கலாமின் பெயரை வைப்பதே சரியாக இருக்கும் என்பதால் பிரதமருக்கு 2015 ஆம் ஆண்டிலேயே கடிதம் அனுப்பி பெயர் மாற்றத்திற்கு வலியுறுத்தியதாகவும்  தெரிவித்தார்.

இதனையடுத்து புது டெல்லி நகராட்சி கவுன்சில், கடந்த 2015 ஆகஸ்ட் 28 அன்று பெயர்மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.