தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரிய விரிவுரையாளர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளம் முடங்கியது.
அரசு கல்லூரிகளில் பணிபுரிய விரிவுரையாளர்கள் பணிக்காக நடத்தபடும், செட் தேர்வை இந்த ஆண்டு அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இதற்கான விண்ணப்பம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான இன்று அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பிக்க முற்பட்டதால் இன்று காலை முதல் இணையதளம் முடங்கியது. இதனால் ஏராளமான தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், இணையதளத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருகிறது எனவும், இன்னும் சில மணி நேரங்களில் இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தனர்.
மேலும் கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக இன்னும் எந்த முடிவையும் எட்டவில்லை என தெரிவித்துள்ளனர்.