திண்டுக்கல் மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலை சரிந்தததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், சாணார்பட்டி, வடமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1,800 ஏக்கரில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தக்காளி ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்தாண்டு அனைத்து விவசாயிகளும் தக்காளி பயிரிட்டதால் அதிக விளைச்சல் ஏற்பட்டு ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், பறிப்பு கூலி, தண்ணீர்பாய்ச்சல், களை எடுப்பு கூலி கூட கிடைக்காமல், தக்காளியை பறிக்காமல் அப்படியே செடியிலேயே விட்டு விடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்