சனி, 10 பிப்ரவரி, 2018

பேட்டரி பேருந்துகள் பற்றி போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் February 9, 2018

Image

பேட்டரியில் இயங்கும் பேருந்துகள் இவ்வாண்டுக்குள் சென்னையில் இயக்கப்படும், என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் நடைபெறும் வாகனக் கண்காட்சியை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு தெரிவித்தார். இந்த கண்காட்சியில், இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டில் தயாரான மின்சாரம் மற்றும் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் பிரத்யேகமாக இடம்பெற்றன. 

இவற்றை பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு என்பது அரசின் கொள்கை முடிவு என்றும், அதன் மீது முதல்வர் முடிவெடுப்பார், என்றும் தெரிவித்தார். 

மேலும், வேலைநிறுத்தம் செய்யப்பட்ட நாட்களுக்கு, போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதியம் தரப்பட மாட்டாது என்று தெரிவித்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், பேட்டரியில் இயங்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகள் சென்னையில் அறிமுகப்படுத்தப்படும், என்றும் தெரிவித்தார்.