
எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனால் சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. நாமக்கல்லில் நேற்று முன் தினம் நடைபெற்ற தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் பொதுக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
டேங்கர் லாரிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்யும் டெண்டர் முறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த டெண்டரை மாநில அளவிலான டெண்டராக மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாநில அளவில் டெண்டர் நடைபெற்றால் தமிழகப் பதிவெண்கள் கொண்ட லாரிகள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த மாதம் முறையிட்டனர்.
இதனை மத்திய அரசு ஏற்க மறுத்ததால் அவர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.