திங்கள், 12 பிப்ரவரி, 2018

சென்னை ஐ.ஐ.டி-யில் சமஸ்கிருத மொழிக்கு இருக்கை! : தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிப்பு! February 12, 2018

Image

சென்னை ஐ.ஐ.டி-யில் சமஸ்கிருத மொழி குறித்து ஆய்வு செய்வதற்கு விரைவில் சமஸ்கிருத இருக்கை அமைக்கப்பட உள்ளது.

இந்த இருக்கை சென்னை ஐஐடியில் உள்ள மானிடவியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளின் கீழ் செயல்படவிருக்கிறது. வேதங்களில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் நோக்கத்தில் இருக்கை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் ராஜேந்தர சிங் மகாராஜ், சவான் கிரிபால் ஆகியோர் இருக்கை அமைப்பதற்காக நிதியுதவி செய்துள்ளனர். சமஸ்கிருத இருக்கையின் தலைவராக ஸ்ரீ அரபிந்தோ கலாசார மையத்தின் இயக்குநர் சம்பந்தனந்தா நியமிக்கப்பட உள்ளார்.

அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திடம் நிதி பெறப்பட்டு வரும் நிலையில், சென்னை ஐ.ஐ.டியில் சமஸ்கிருத இருக்கை அமைக்கப்படுகிறது. இது தமிழ் மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கை என தமிழ் ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

Related Posts: