காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி இன்றைக்கு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்த்து ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘அர்ப்பணிப்பு, விசுவாசம், உற்சாகத்துடன் ராகுல்காந்தியுடன் இணைந்து அனைவரும் பணியாற்றி கட்சியை வலுப்படுத்த வேண்டும். ராகுல் காந்திதான் தற்போது எனக்கும் தலைவர். அதில், எதில் சந்தேகமும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
“ராகுலின் தலைமையின் கீழ் நாம் ஒருங்கிணைந்து பணியாற்றி, நம் நலன்களுக்கு புத்துயிர் கொடுப்போம் . அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன” என்றும் சோனியா குறிப்பிட்டார்.
மேலும், ‘பாஜக அரசு சிறு அரசியல் லாபங்களுக்காக சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு இதர சமுதாயத்தை அணிதிரட்டுகிறது. இதை நாம் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் கர்நாடகத்திலும் பார்க்கக்கூடும்” என தெரிவித்தார். மேலும், மோடி அரசாங்கம் உண்மைகளுடன் ஒத்துப்போவதில்லை என்றும் பிரதமரின் நாடாளுமன்ற உரையில் அது தெளிவாகத் தெரிந்தது என்றும் குறிப்பிட்டார்.