ஞாயிறு, 11 மார்ச், 2018

“பண மதிப்பிழப்பு நடவடிக்கையை குப்பையில் வீசி இருப்பேன்” - ராகுல் காந்தி March 11, 2018

Image


பிரதமராக இருந்திருந்தால், பண மதிப்பிழப்பு திட்டத்தை குப்பையில் வீசியிருப்பேன், என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.

மலேசியாவில் இந்திய வம்சாவளியினரிடையே ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் தான் பிரதமராக இருக்கும்போது ஒருவேளை பணமதிப்பிழப்பு திட்டம் குறித்து யாராவது என்னிடம் கூறியிருந்தால் நான் அதை குப்பையில் வீசியிருப்பேன் என ராகுல் காந்தி காட்டமாக கூறினார். 

மேலும் பெண்களை ஆண்களுக்கு சமம், என்ற முறையில் தான் நடத்துவது இல்லை என்றும், அதைவிட மேலாக சிறப்புடன் நடத்துகிறேன் என்றும், ராகுல் காந்தி குறிப்பிட்டார். மேற்கத்திய நாடுகளிலும் ஆண் சார்பு நிலை இருப்பதாகவும், இது சரி செய்யப்பட வேண்டும், என்றும் அவர் கூறினார்.

Related Posts: