
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறகிறது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை, குழந்தைகளுக்கு போலியோ எதிர்ப்பு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்களில், போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டிற்கான போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்டமாக வழங்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது கட்டமாக வழங்கப்படுகிறது. இதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.