வெள்ளி, 16 மார்ச், 2018

லட்சத்தீவில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்கள் கண்ணீருடன் கோரிக்கை! March 16, 2018

Image


அரபிக்கடலில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் லட்சத்தீவில் கரை ஒதுங்கிய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 500 மீனவர்கள் தங்களை மீட்குமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புயல் எச்சரிக்கையால் லட்சத்தீவில் கரை ஒதுங்கிய கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 500 பேர் 4 நாட்களாக உணவின்றி தவித்து வருவது அவர்களது குடும்பத்தினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை ஆய்வுமையத்தின் எச்சரிக்கையை எடுத்து, 41 படகுகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், லட்சத்தீவில் பத்திரமாக கரை சேர்ந்தனர். 

உரிய அனுமதியின்றி லட்சத்தீவில் கரை சேர்ந்தததால், அங்குள்ள கடற்படை அதிகாரிகள், மீனவர்களின் அடையாள அட்டை, சான்றிதழ்களை பறித்துள்ளனர். இதனால் ஊருக்கு திரும்ப முடியாமலும், உணவு மற்றும் நீரின்றியும் மீனவர்கள் தவித்து வருகின்றனர். மத்திய அரசு தொடர்பு கொண்டால் மட்டுமே விடுவிப்போம் என லட்சத்தீவு அதிகாரிகள் கூறுவதாக மீனவர்கள் வேதனையுடன் கூறினர். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியை தொடர்பு கொண்ட மீனவர்கள், தங்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.