மத்திய அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்குமாறு நீண்டகாலமாக, தெலுங்கு தேசம் கட்சி கோரி வருகிறது. இதை மத்திய அரசு ஏற்காததால் அக்கட்சியை சேர்ந்த அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ். செளதரி ஆகியோர், மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தனர்.
இதனிடையே, ஆந்திராவின் மற்றொரு முக்கிய கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திடீரென மத்திய அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப் போவதாக அறிவித்துள்ளது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுக்கும், மத்திய அரசைக் கண்டித்து, நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சி, நாடாளுமன்றச் செயலாளருக்கு முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய அரசு ஆந்திராவை தொடர்ந்து புறக்கணித்தால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி-க்கள் அனைவரும், ஏப்ரல் 6-ம் தேதி ராஜினாமா செய்வார்கள், என்றும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை, தேவைப்பட்டால் தெலுங்கு தேசம் கட்சி ஆதரிக்கும், என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 272 எம்.பி.,க்களுடன் பலமான தனிப்பெரும்பான்மையுடன் பாஜக விளங்கும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் முதன்முறையாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
12,000 ஏக்கர் நில ஒதுக்கீடு பிரச்சனை:
ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையான மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக இருந்த போது 11,800 ஏக்கர் நிலத்தை முறைகேடாக தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கியதாகவும் அதற்கு கைமாறாக தொழிலதிபர் நிம்மகடா பிரசாத், ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன்மோகன் ரெட்டியின் நிறுவனத்தில் 780 கோடி ரூபாயை முதலீடு செய்ததாகவும் அமலாக்கத்துறையினருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து குறிப்பிட்ட 12,000 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத்துறையினர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான ரூ.538 கோடி மற்றும் ரூ.325 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் கடந்த 2014ஆம் ஆண்டு முடக்கியது.
இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான 149 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலாக்கத்துறையினர் முடக்கியது நினைவுகூறத்தக்கது.