செவ்வாய், 6 மார்ச், 2018

காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு March 5, 2018

Image

ஆளுநர், முதல்வர், தலைமை நீதிபதி, உள்ளிட்டோரின் வாகனங்கள் செல்லும்போது 5 முதல் 10  நிமிடங்களுக்கு மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தொடர்ந்த வழக்கில், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மருத்துவமனைக்கு செல்லும்போது முதல்வர் செல்வதாக கூறி ராயப்பேட்டை அருகே வாகனம் நிறுத்தப்பட்டதாகவும், இதனால் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்ததாக கூறியுள்ளார். 

சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என தெரிவித்தனர். 

ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வர் உள்ளிட்டோரின் வாகனங்கள் செல்லும்போது 5 முதல் 10 நிமிடங்களுக்கு மட்டுமே போக்குவரத்து நிறுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த உத்தரவு குடியரசு தலைவர், பிரதமர் வருகையின் போது பொருந்தாது எனவும் உத்தரவை காவல்துறை முறையாக மேற்கொள்ளும் என நம்புவதாக கூறினர்.

Related Posts: