திரிபுராவில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்ற நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
திரிபுராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா எதிர்பார்த்த இடங்களைவிட அதிகமான இடங்களை கைப்பற்றி ஆட்சியை தனதாக்கி உள்ளது. சனிக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் ஞாயிறு அன்று பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.
பிஷால்கார்க், கோவாய், மோகான்பூர், சாப்ரூம், கோம்லாங், மெலார்க், ஜிரானியா, பெலோனியா, ராம்நகர் மற்றும் அகர்தலாவில் தெற்கு ராம்நகர் ஆகிய பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சி அலுவலங்கள், மற்றும் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொலெனியா கல்லூரி சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த லெனின் முழு உருவச் சிலை, அங்கிருந்து இடித்து தள்ளப்பட்டது.
இந்த நிலையில், போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்து உள்ளது.