திங்கள், 9 ஏப்ரல், 2018

இந்தியாவில் கிடைக்கும் டாப்-5 சிறந்த வயர்லெஸ் மொபைல் சார்ஜர்கள்! April 9, 2018

Image

இந்தியாவில் கிடைக்கும் டாப்-5 சிறந்த வயர்லெஸ் சார்ஜர்கள் குறித்த ஒரு பார்வையை இத்தொகுப்பில் அறியலாம்.

தற்போது மார்கெட்டில் கிடைக்கும் பெரும்பாலான புதிய தலைமுறை ஸ்மார்ட் போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கிடைக்கிறது, இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிம்மதியைக் கொடுக்கும் ஒரு வசதியாக சமீபத்தில் உருவெடுத்துள்ளது. 

வயர்லெஸ் சார்ஜிங் என்றால் என்ன?

ஸ்மார்ட் போன்களை நீண்ட நேரம் தொடர்ந்து பயன்படுத்தும் அளவிற்கு அதில் ஆற்றலை சேமித்து வைக்கும் வசதி இல்லாததால் அடிக்கடி சார்ஜ் செய்யும் நிலைக்கு அதன் பயன்பாட்டாளர்கள் தள்ளப்படுகின்றனர். இதுவே அதன் பெரிய மைனஸ் ஆக இருந்து வந்தது. தற்சமயம் ஆற்றலை அதிக நேரம் சேமித்து வைக்கும் தொழில்நுட்பம் அதிகளவில் பயன்பாட்டிற்கு வராததால் வயர்லெஸ் சார்ஜர் பெருமளவு வாடிக்கையாளர்களுக்கு கைகொடுக்கிறது.

1. Samsung Fast Charge Wireless Charger

சாம்சங் நிறுவனத்தின் வயர்லெஸ் சார்ஜர் ஆனது  Qi தர சான்று பெற்றுள்ளதால் Qi ஆதரவு கொண்ட மொபைல்கள் அனைத்திற்கு இதனைப் பயன்படுத்தலாம். இது அதிவேக சார்ஜிங் திறன் கொண்டுள்ளது.

மிகவும் ஸ்லீக்கான சார்ஜிங் பேட் கொண்டிருப்பதால் இதனை போன் ஸ்டேண்டாகவும், சார்ஜராஜவும் இருவகையில் பயன்படுத்தலாம்.

இதில் பல்டி கலர் எல்.ஈ.டி விளக்குகள் உள்ளன, இவை சார்ஜிங் நிலையை காட்டுகின்றன. 

விலை: சாம்சங் ஆன்லைன் தளம் மற்றும் ஃபிளிப்கார்ட் இணையதளங்களில் இதன் விலை 3,299 ரூபாய் ஆகும்.

Supports: இவை சாம்சங் S8. S8+, S9 மற்றும் S9+ மாடல்களில் பயன்படுத்தலாம்.

2. Taslar Ultra-thin Qi Wireless Charging Pad

10 செமீ நீளமும், 7 மிமீ அகலமும் கொண்ட மிகவும் ஸ்லீக்கான வயர்லெஸ் சார்ஜர்களுள் ஒன்றாக இருக்கிறது Taslar. சாம்சங் போலவே இதுவும் Qi தர சான்று பெற்றுள்ளது.

விலை : ரூ. 1,699

Supports: iPhone X, i Phone 8, Galaxy S9, S8

3. Anker PowerTouch 5W Wireless Qi Charger

அமெரிக்க மொபைல் உதிரி பாகங்கள் மற்றும் துணைப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான Anker அதிக செயல்திறன் கொண்ட ஒரு சார்ஜராகும். இதில் சார்ஜிங் இண்டிகேட்டருக்கான on/of ஸ்விட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில்Temperature control, Overcurrent மற்றும் overvoltage protection ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.

விலை: ரூ.2,499

Supports: iPhone 8, iPhone 8 Plus, iPhone X, Samsung Galaxy S8 S8 Plus

4. Belkin Qi Wireless Charging Pad

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மின்னணு தயாரிப்பு நிறுவனமான Belkin, Qi சான்று பெற்ற  anti-slip padding வசதி கொண்ட வயர்லெஸ் சார்ஜ்ரை சந்தைப்படுத்தியுள்ளது.

விலை: ஃபிளிப்கார்ட் தளத்தின் இது ரூ.2,987 என்ற விலையில் கிடைக்கிறது.

Supports: Galaxy S6 Edge, S6 Edge+, Galaxy S7, Galaxy S7+, iPhone 8/8+, iPhone X, Nexus 7

5. Noise Slimmest 10W Qi Fast Wireless

வெறும் 5.5 மிமீ தடிமன் கொண்ட இது மிகவும் மெலிதான ஒரு வயர்லெஸ் சார்ஜராகும்.

Qi தர சான்று பெற்ற இச்சாதனத்தில் தாமிரத்திலான அடிப்பாகம் கொண்டிருப்பதால் வெப்பத்தை கட்டுக்குள் வைத்திருக்கும், ஸ்கிரேட்ச் ஆவதை தடுக்கும் வகையில் ரப்பர் மேல்புறம் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை: ரூ.2,299

Supports: iPhone X, iPhone 8, iPhone 8 Plus, Samsung Galaxy S8