ஜல்லிகட்டு போராட்டத்தின் போது பொதுசொத்துகளுக்கு தீ வைக்கவில்லை எனவும், தேன் கூட்டை கலைக்கவே தீ வைக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக விசாரணை ஆணைய நீதிபதி.ராஜேஸ்வரன் தெரிவித்தார்.
உலகமே வியக்கும் வகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிகட்டுக்காக சென்னை மெரினா கடற்கரையில் தன்னெழுச்சி போராட்டம் நடைபெற்றது. மிகபிரம்மாண்டமாக நடைபெற்று வந்த இந்த போராட்டத்தில், போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி போன்ற விடயங்களில் ஈடுபட்டனர். இதலில் எராளமான மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாத்திக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது போலீசார் சிலர் பொது சொத்துகளுக்கு தீ வைப்பது சேதப்படுத்துவது போன்ற காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இதனை தொடர்ந்து, ஜல்லிகட்டு போராட்டத்தை பற்றி விசாரணை நடந்த, விசாரணை ஆணையம் ஒன்று நியமிக்கப்பட்டது. இதற்கு நீதிபதி ராஜேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டு விசாரணை நடந்தி வந்தார். இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆணையம் சார்பாக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம், மருத்துவர்கள், தனியார் கல்லூரி முதல்வர், ரயில்வே ஊழியர்கள் என 18 பேரிடம் 3 நாட்கள் விசாரணை நடைபெறுவதாக கூறினார். சென்னையில் நடந்த விசாரணையில் ராகவா லாரன்ஸ், பாலாஜி, ஹிப் ஆப் தமிழா போன்ற நடிகர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
போராட்டத்தின் போது பொது சொத்துகளுக்கு காவல்துறையினர் தீ வைப்பது போன்ற காட்சிகள் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தேன் கூட்டை கலைக்கவே தீ வைக்கப்பட்டதாக விசாரணைக்கு வந்த போலீசார் தெரிவித்துள்ளதாக நீதிபதி ராஜேஸ்வரன் குறிப்பிட்டார். இது ஜல்லிகட்டு போராட்டத்தில் பங்கேற்றவர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.