வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும், வட தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டிணத்தில் 6 சென்டிமீட்டர் மழையும், தொண்டி மற்றும் பெரியகுளத்தில் தலா 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்த வரை வானம் தெளிவாக காணப்படும் என தெரிவித்துள்ள வானிமை ஆய்வு மையம், சென்னையில் அதிகப்பட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என கூறியுள்ளது.