விமானத்தில் கொசுத்தொல்லை இருந்ததாக புகார் கூறிய பயணியை, விமான ஊழியர்கள் அதில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 8ஆம் தேதியன்று லக்னோவில் இருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்தில் சவுரப் ராய் என்ற பயணி பயணம் செய்ய தயாரக இருந்தார். விமானம் புறப்படத் தயாராக இருந்த நிலையில், அங்கு கொசுத்தொல்லை இருந்ததால், இதுகுறித்து அவர் விமான ஊழியர்களிடம் புகார் செய்தார்.
ஆனால், புகாருக்கு பதிலளிக்காத விமான ஊழியர்கள், அவரை விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.