கொடுமையான முறையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட காஷ்மீர் சிறுமி ஆஷிஃபா குறித்து வகுப்பறையில் பேசிய கோவை சட்டக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி பிரியா என்பவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சட்டக்கல்லூரியில் மூன்றாண்டு சட்டப்படிப்பில், முதாலாம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வருபவர் மாணவி பிரியா. நேற்று கல்லூரியில் ஆங்கில வகுப்பில் மேடை பேச்சுதிறனை வளர்க்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது பிரியாவை பேச அழைத்த போது அவர், காஷ்மீரில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிஃபா கொடுரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து பேசி உள்ளார்.
அப்போது அங்கு வந்த அக்கல்லூரி உதவி பேராசிரியர் அம்மு, வகுப்பறையில் இருந்த ஆங்கில பேராசியர் மற்றும் மாணவி பிரியாவை திட்டியதுடன், வகுப்பறையில் பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் பிரியா பேசியதாக முதல்வர் கோபாலகிருணனிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பிரியா, காலம் குறிப்பிடாமல் தற்காலிகமாக கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மாணவி பிரியா கூறுகையில், ஆஷிஃபா உயிரிழந்தற்கும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கும், பெண்கள் அணியும் உடை காரணமல்ல, பெண்களை போக பொருளாக சித்தரிக்கும் சமூகமே காரணம் என்றே கூறியதாகவும் தெரிவிதார்.
ஆனால் தன் மீது பாலினம் மற்றும் மத ரீதியான மோதலை தூண்டும் வகையில் பேசியதாக வீண் குற்றம் சுமத்தி கல்லூரி நிர்வாகத்தினர் இடைநீக்கம் செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். இது குறித்து கல்லூரி முதல்வர் தன்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை என தெரிவித்த மாணவி, தேதி குறிப்பிடமால் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மே மாதம் தேர்வை எழுவதில் பாதிப்பு ஏற்படுமோ என்ற ஐயமும், பயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் வகுப்பில் அனுமதி பெற்று ஜனநாயக முறைப்படி சுய கருத்துகளை தெரிவிக்கக்கூட சுதந்திரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஜனநாயக உரிமையை பரிக்கும் இச்செயல் தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள போவதாகவும் தெரிவித்தார்.