ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை, விரைவு சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் மெகபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ள அவர், வழக்கு விசாரணையை 90 நாட்களில் முடிக்கும் நோக்கில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது திருப்தி தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் மக்கள் மட்டுமின்றி, ஜம்மு மக்களும், இந்த துயரத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.