மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால், தமிழகத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி, மதுரை மாவட்டம் சித்தாம்பட்டி, நீலகிரி மாவட்டம் கூடலூர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது எனவும் சிவகாசி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தலா 4 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார்.
மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் தெரிவித்தார்.
தென் தமிழகம் மட்டுமல்லாமல், வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.