இணைய பயன்பாட்டில் உலக அளவில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனை அதிகரிப்பு, வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், டிவிட்டர் பயன்பாடு அதிகரிப்பு ஆகியவையே இணைய பயன்பாடு அதிகரிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது. மேலும், ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கின் வருகையும், இதனையடுத்து இணைய பயன்பாட்டுக்கான கட்டணம் வெகுவாக குறைந்ததும் இதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவதை இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் இணையத்தின் டவுன்லோடு வேகம் நொடிக்கு 8.8 எம்.பி என்ற அளவில் உள்ளதால், தற்போது உலக அளவில் 109வது இடத்தில் உள்ளது.
அதேநேரத்தில், ஒரு மாதத்திற்கான இணைய பயன்பாடு 2.1 எக்சா பைட் ஆக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், இணைய பயன்பாட்டில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
1.8 எக்சா பைட் உடன் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், 1 எக்சா பைட் உடன் சீனா 5வது இடத்திலும் உள்ளது. ஒரு எக்சா பைட் என்பது 10 லட்சம் டெர்ரா பைட் என்பது குறிப்பிடத்தக்கது. (1 exabyte = 1 million terabytes)