அத்துமீறி அரசு அலுவலகத்தில் நுழைந்ததாக கூறி, திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை கூட்டுறவு பண்டகசாலையில் கடந்த மாதம் 31ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், ஈபிஎஸ் அணியினர் போட்டியின்றி வெற்றிப்பெற்றனர். இந்நிலையில், ஈபிஎஸ் அணியினர் தவிர மற்றவர்களிடம் வேட்புமனுக்கள் பெறப்படவில்லை எனக்கூறி தேர்தல் வெற்றியை ரத்து செய்ய கோரி மனு அளிக்க, திமுக எம்எல்ஏ ரகுபதி தலைமையில் திமுகவினர், புதுக்கோட்டை ஒருங்கிணைந்த கூட்டுறவு சங்கத்திற்கு வந்திருந்தனர்.
அவர்களை காத்திருக்குமாறு கூறிவிட்டு மண்டல இணை பதிவாளர் வெளியே சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த போலீஸார், திமுகவினர் அத்துமீறி அரசு அலுவலகத்தில் நுழைந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
அதனைத்தொடர்ந்து, எம்எல்ஏ ரகுபதி உள்ளிட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.