செவ்வாய், 3 ஏப்ரல், 2018

இளைஞரை கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கிய போக்குவரத்து போலீஸார்! April 3, 2018

சென்னையில் இளைஞர் ஒருவரை போக்குவரத்து போலீஸார் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், தனது தாய் மற்றும் சகோதரியுடன் தியாகராயநகரில் பொருட்கள் வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிந்தார். 

துரைசாமி சுரங்கப்பாதை பகுதியில் வந்தபோது. அவரை தடுத்து நிறுத்தி போலீஸார், ஏன் தலைக்கவசம் அணியவில்லை எனவும், இருசக்கரம் வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தது குறித்தும் விசாரித்துள்ளனர்.

அதற்கு ஹெல்மெட் வாங்க வசதி இல்லை என பிரகாஷ் பதிலளித்துள்ளார். இதற்கு, போலீஸார் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறு முற்றி பிரகாஷை போலீஸார் கம்பத்தில் கட்டிவைத்தனர். 

இதை தடுக்க வந்த பிரகாஷின் தாய் சங்கீதாவை போலீஸார் தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், போலீஸார் ஒருவரின் சட்டையை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை அடுத்து, பிரகாஷ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.