பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டி-க்குள் விரைவில் கொண்டுவரப்படும் என நம்புவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சந்தை விலையில் பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கும் வகையில், பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரையரைக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு ஜிஎஸ்டி கவுண்சிலுக்கு கோரிக்கை வைத்துள்ளார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் அனைத்தும் சர்வதேச நுகர்வுப் பொருட்கள் என்பதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறும் போதெல்லாம் அதன் தாக்கம் இந்தியாவில் பெருமளவு எதிரொலிக்கிறது என்றும் இவற்றை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்தால் அவை மக்களுக்கு பயன் அளிக்கும் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவை மக்களின் அன்றாட தேவைப் பட்டியலில் உள்ளதாலும் அவை நாட்டின் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாலும் இவை ஜிஎஸ்டி வரையறைக்குள் கொண்டுவர வேண்டிய தேவை உள்ளதென்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது இவை வாட் வரி விதிப்பில் உள்ளன.
அண்மையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தையடுத்து 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது, இதே போல முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு டீசல் விலை அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெட்ரோலியத் துறை அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.