வியாழன், 5 ஏப்ரல், 2018

தி.நகரில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம்: டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்! April 4, 2018

Image

பொதுமக்கள் முன்னிலையில் காவல் அதிகாரிகள் 3 பேர் இளைஞர் பிரகாஷை  கம்பத்தில் பிடித்து வைத்து கைகளை முறுக்கும் காட்சிகளும், அவரைத் தாக்கும் காட்சிகளும் அப்போது பிரகாஷின் தாயாரும், சகோதரியும் அவரை விட்டுவிடும்படி கதறும் காட்சியும் வைரலானது.

3 அதிகாரிகள் இளைஞர் பிரகாஷை இழுத்துச்செல்வதும், அவரது தாயார் சங்கீதா அவர்களிடம் கெஞ்சுவதும் பின்னர் அதில் ஒரு அதிகாரி அவரைப் பிடித்து தடுத்து தள்ளிவிடும் காட்சிகளை கண்ட பொதுமக்கள் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தாக்கப்பட்ட இளைஞர் பிரகாஷ் மீது  294 (b), 332, 427 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தேசிய மனித உரிமை ஆணையம் டிஜிபிக்கு இது குறித்து 4 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாநில மனித உரிமை ஆணையமும் பத்திரிகைகளில் வந்த செய்தியை பார்த்து தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இது குறித்து வரும் 18-ம் தேதி இளைஞர் பிரகாஷை தாக்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் சுரேஷ் மற்றும் ஜெயராமன் இருவரும் நேரில் விசாரணையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.