சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை தடையை மீறி முற்றுகையிட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முன்னதாக போராட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்ததால் காவல்துறையினருடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியபடியே தடையை மீறி சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்றதால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யப்பட்டனர்.