திங்கள், 5 அக்டோபர், 2020

மத்திய அரசின் 5 ஆம் கட்ட தளர்வுகள்: இன்று முதல் என்னென்ன திறக்கப்படுகின்றன?

 மத்திய அரசின் 5 ஆம் கட்ட தளர்வுகளின் அடிப்படையில் இன்று நாட்டில் பல பகுதிகளில் பள்ளிகள், கோயில்கள், உணவகங்கள் ஆகியவை திறக்கப்படவுள்ளன. 


உலக நாடுகளை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதிகருக்கும் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் பாதிப்பு தொடந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே பொருளாதார பாதிப்புகள் கருதி சமீபகாலமாக மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

 

இதனிடையே கடந்த 30 ஆம் தேதி அக்டோபர் மாததிற்கான 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில் பள்ளிகள், கோயில்கள், உணவகங்கள் மற்றும் திரையரங்குகளை திறக்க அனுமதியளித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் பள்ளிகள் கோயில்கள் உள்ளிட்டவை இன்று திறக்கப்படவுள்ளன. 

 

இதில் தமிழகத்தில் சென்னையில் புறநகர் ரயில்கள் இன்று முதல்  அத்தியாவசிய ஊழியர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. 
தற்போது, ​​ரயில்வே மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். 

 

மகாராஷ்டிராவில் ஏழு மாதங்கள் மூடப்பட்ட பின்னர் உணவகங்கள், பார்கள், கஃபேக்கள் மீண்டும் இன்று திறக்கப்படவுள்ளன. 


புதுச்சேரியில் இன்று முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகளை மீண்டும் திறக்க யூனியன் பிரதேசம் அரசு அனுமதித்துள்ளது.


திரிபுராவில் உள்ள பள்ளிகள் இன்று முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தன்னார்வ அடிப்படையில் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள  இஸ்கான் கோயில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பொதுமக்களுக்காக வழிபாட்டுக்காக திறக்கப்படவுள்ளது. இந்த கோயில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், வார நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில்  மெட்ரோ ரயில் இயக்க நேரம் இன்று முதல் அதிகரிக்கப்படுகிறது.,