புதன், 3 பிப்ரவரி, 2021

உங்களின் சம்பள பணமும் குறைய போகுது.. சேமிக்கும் பணத்துக்கும் வட்டி! அதிர்ச்சி தந்த மத்திய அரசு

 நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மாத சம்பளம் வாங்குவோருக்கு பல அதிர்ச்சி அறிவிப்புகளை அளித்தது. அதில் ஒன்று தான் இந்த அறிவிப்பு. விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு கொண்டுவந்த கோட் ஆன் வேஜஸ் (Code on Wages) 2021 ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

திட்டம் குறித்த முழு விபரம்:

ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் கூடுதலான ஊதிய பணம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு செல்லும்.கேட் ஆன் வேஜஸ் படி, அலோவன்ஸ் தொகை, ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு அதிகமாக போகக் கூடாதாம்.அதாவது மாத சம்பளம் வாங்குவோரின் அடிப்படை சம்பளம் மொத்த ஊதியத்தில் குறைந்தது 50% ஆக இருக்க வேண்டும் என்று அரசு நிர்ணயித்துள்ளது. தற்போதைய நிலையில் அடிப்படை சம்பளம் குறைவாகவும் மற்ற இதர தொகைகள் அதிகமாகவும் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.எனவே அலோவன்ஸ் என்று இனி அதிகமாக கணக்கு காட்ட முடியாது. அடிப்படை சம்பளத்தை உயர்த்தி காட்டியாக வேண்டும் இதுதான் இந்த திட்டத்தின் முழு விபரம். அடடே நல்ல திட்டமாக இருக்குனு யோசிக்கிறவங்க வெயிட் பண்ணுங்க

பட்ஜெட்டில் வெளியான புதிய அறிவிப்பு, ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பணம் சேர்ந்தால் அதற்கு வரி விதிக்கப்படும். எனவே, .கேட் ஆன் வேஜஸ் படி
மாதம் 25,000 ரூபாய் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு சென்றால், ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் அவரது கணக்கில் வரவு வைக்கப்படும் அதற்கு வரி விதிக்கப்படும். மொத்தத்தில் சம்பளமும் குறைய போகுது, சேமிப்புக்கு பிஎஃபிலும் வட்டி விதிக்கப்பட போகுது.

source https://tamil.indianexpress.com/business/salary-account-pf-salary-account-pf-interest-pf-sharing-pf-online-pf-apply-245503/