கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக ஆக்ஸிஜன், மருந்து வழங்கல் மற்றும் தடுப்பூசி கொள்கை தொடர்பான் பிரச்னைகள் குறித்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தாமாக முன்வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டபோது, தகவல் தெரிவிப்பதில் எந்தவிதமான தடையும் இருக்கக்கூடாது என்று கூறியது.
“இதுபோன்ற குறைகளை தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பரிசீலனை செய்தால் நாங்கள் அதை நீதிமன்ற அவமதிப்பாக கருதுவோம். தகவல்களை கட்டுப்படுத்துவது அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என்று அனைத்து மாநிலங்களுக்கும், மாநிலங்களின் டிஜிபிக்கும் ஒரு வலுவான செய்தியை அனுப்பலாம்.” என்று நீதிபதி டி.ஒய் சந்திரசூட் கூறினார். மேலும், அவர் கூறுகையில், “குடிமக்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் தங்கள் குறைகளைத் தெரிவித்தால், அது தவறான தகவல் என்று சொல்ல முடியாது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.” என்று கூறினார்.
கிறோம்.” என்று கூறினார்.
நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஒரே தடுப்பூசிக்கு ஏன் இரண்டு வெவ்வேறு விலைகள் உள்ளன என்று மத்திய அரசிட கேட்டனர். மேலும், “தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் முறையை நீங்கள் ஏன் பின்பற்றவில்லை? தடுப்பூசிக்கான மருத்துவ வசதி மே 1ம் தேதிக்குப் பின் தொடருமா? ” என்று கேட்டனர்.
கோவிட் -19 நெருக்கடியை நிர்வகிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பிய நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மத்திய அரசில் இருந்து மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் குறித்த உடனுக்குடன் தெரிவிக்க ஒரு காட்சி அமைப்பை வைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். மேலும், “கல்வியறிவற்ற நபர்களுக்கு தடுப்பூசி பதிவு செய்வதை மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு உறுதி செய்கின்றன?” என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்குகூட மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. “விடுதிகள், கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பிற இடங்கள் திறக்கப்பட்டு கோவிட் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட வேண்டும். மேலும், சுகாதாரத் துறை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ஓய்வு பெற்ற மருத்துவர்கள் அல்லது அதிகாரிகள் மீண்டும் பணியமர்த்தப்பட வேண்டும்” என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.
கோவிட் -19 தொற்றுநோய் பரவலின்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சுகாதார அவசரநிலைகள் தொடர்பான ஆபத்தான சூழ்நிலையை ஏப்ரல் 22ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிந்து கொண்டு, இத்தகைய சூழ்நிலையைக் கையாள உடனடியாக பயனுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு முந்தைய விசாரணையின்போது, இந்த நெருக்கடியான சூழ்நிலையை கையாள ஒரு தேசிய திட்டத்தை தயாரிக்க முடியுமா என்றும் அதை முன்வைத்து விளக்கமளிக்கும்படி உச்ச நீதிமன்றம் கேட்டது. டெல்லி உயர்நீதிமன்றம் உட்பட குறைந்தது 6 வெவ்வேறு மாநில உயர்நீதிமன்றங்கள் இந்த விவகாரங்களை விசாரித்து வருகிறது.
source : https://tamil.indianexpress.com/india/supreme-court-says-on-covid-crisis-that-no-clampdown-on-information-people-can-voice-grievances-on-social-media-298132/