வெள்ளி, 9 செப்டம்பர், 2022

இந்தியாவின் 2-வது சுதந்திர போராட்டத்திலும் அவர்கள் பங்கு இல்லை: ப.சிதம்பரம்

 7 9 2022

வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும், தற்போது ராகுல் தொடங்கியிருக்கும் 2-வது சுதந்திர போராட்டத்திலும் பாஜகவுக்கு பங்கு இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில் 150 நாள் பாதயாத்திரையாக இதை தொடங்கியுள்ளார். மொத்தம் 3,570 கிலோ மீட்டர் தொலைவு மேற்கொள்ளவுள்ள நடைபயணத்தின் தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரியில் இன்று நடைபெற்றது.

ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெறும் இந்த யாத்திரையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை கொடுத்து தொடங்கி வைத்தார். கடற்கரை சாலையில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி, சிறிது தூரம் நடந்து சென்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

 

பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள், தமிழ்நாடு அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ப.சிதம்பரம், ராகுல்காந்தியின் நடைபயணத்தை கொச்சை படுத்துபவர்கள் நாட்டில் நாம் இருக்கிறோம் என்பதால் அவர்களை மகாத்மா காந்தி மன்னிக்க வேண்டும் என்றார்.

இந்திய சுதந்திரத்தின்போது, வெள்ளையனே வெளியேறு என்று பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பு கேலி செய்தது. அவர்கள் அப்போதைய சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. தற்போது நடைபெறும் 2-வது சுதந்திர இந்திய ஒற்றுமை போராட்டத்திலும் பங்கேற்கவில்லை என்றார். வெள்ளையனே வெளியேறு என்று சொன்னது போல், பாஜக-வை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என தெரிவித்தார். முன்னதாக பாரதி பாடலை பாடி இந்திய மக்கள் ஒற்றுமை குறித்து ப.சிதம்பரம் பேசியது குறிப்பிடத்தக்கது.

 

-இரா.நம்பிராஜன்

source https://news7tamil.live/bjp-had-no-role-in-indias-2nd-freedom-struggle-either-p-chidambaram.html

Related Posts:

  • மதுவை ஹராம் எனும் சமுதாயத்தில் இவரை என்ன செய்வது? நாடே மதுவிலக்கு வேண்டும் என அனைத்து தரப்பினரும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தொலைக் காட்சிகளில் தொப்பியும் தாடியுமாக உட்கார்… Read More
  • மர்ம நபர் - தற்கொலை தாக்குதல் தற்பொழுது இன்னாலில்லாஹீ வஇன்னா இலைஹீ ராஜீவூன் சவுதி ஜித்தாவில் உள்ள அபஹா என்ற பகுதியில் தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு படையின் தளத்தில் அமைந்த… Read More
  • தீவிரவாதம் 'பாபர் மசூதி'யை இடித்தது முதலே 'ஹிந்து(த்துவ) தீவிரவாதம்' என்ற சொல்லாடல் புழக்கத்துக்கு வந்துவிட்டது : நீதியரசர் லிப்ரஹான் பேட்டி..! 1992-ம் ஆண்… Read More
  • விவசாயிக்கு இழப்பீட்டு தொகை http://www.firstpost.com/bollywood/ib-ministry-probe-rs-6-21-cr-payment-amitabh-bachchan-says-dd-kisan-ad-pro-bono-2353772.html ஹரியானாவி… Read More
  • Hadis -கழிவறைக்குள் நுழையும்போது நபி(ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும்போது 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி' என்று கூறுவார்கள்.(பொருள்: இறைவா! ஆண் பெண் ஷைத்த… Read More