Tamil Nadu News: ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டிருக்கும் ராஜிவ் காந்தி நினைவிடத்தில் தனது மரியாதையை செலுத்துவதற்காக ராகுல் காந்தி நாளை நடைப்பயணத்தை தொடங்கவிருக்கிறார்.
நாளை, காமராஜர் மணிமண்டபம் மற்றும் காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்தியபின், அங்கிருந்து தனது நடைப்பயணத்தை துவங்கவிருக்கிறார்.
இந்த நடைப்பயணத்தை துவங்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்குபெறுகிறார். நடைப்பயணத்தை துவங்குவதற்கான தேசியக்கொடியை ராகுல் காந்தியிடம் வழங்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது. கொடியை பெற்ற பின்பு அங்கிருந்து 600 மீட்டர் நடைப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் ராகுல் காந்தி.
இந்நிகழ்விற்கு ராகுல் காந்தியுடன் 300 பேர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து 118 பேர் பயணித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து 100 பேர் ராகுல் காந்தியுடன் இந்த நடைப்பயணத்தில் பங்குபெறவிருக்கின்றனர்.
இந்த நடைப்பயணத்தின்போது திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 8ம் தேதி, காலை 6 மணிக்கு நடைபயணத்தை தொடங்க இருக்கின்றனர். ராகுல்காந்தி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து தனது நடைப்பயணத்தை ஆரம்பித்து, கொட்டாரம் காமராஜர் சிலை வரை நடக்கவிருக்கிறார்.
பின்பு, காலை 6.30 மணிக்கு கொட்டாரம் காமராஜர் சிலை அருகில் தொடங்கி பொத்தையடி ஜங்ஷன் வரை நடக்கவிருக்கிறார். பிறகு 7 மணிக்கு பொத்தையடி முதல் வழுக்கம்பாறை வரையும், 7.30 மணிக்கு வழுக்கம்பாறை சந்திப்பில் தொடங்கி சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம்/ பள்ளி வரையும் நடக்கவிருக்கிறார்.
பின்னர் மாலை 3 மணிக்கு சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் பள்ளியில் தொடங்கி கோட்டார் புனித சவேரியார் பேராலயம் வரையும், மாலை 4 மணிக்கு கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் துவங்கி டெரிக் சந்திப்பு வரையும் இந்த நடைபயணம் நடைபெற இருக்கிறது.
செப்டம்பர் 9-ம் தேதி அன்று காலை 6 மணிக்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதல் சுங்கான்கடை சந்திப்பு வரையும், காலை 6.30 மணிக்கு சுங்கான்கடை சந்திப்பு முதல் வில்லுக்குறி சந்திப்பு வரையும், காலை 7 மணிக்கு வில்லுக்குறி சந்திப்பு முதல் புலியூர்குறிச்சி சர்ச் வரையும். மாலை 3 மணிக்கு புலியூர்குறிச்சி சர்ச் முதல் மேட்டுக்கடை மசூதி சந்திப்பு வரையும், மாலை 4 மணிக்கு தக்கலை மேட்டுக்கடை சந்திப்பு முதல் முளகுமூடு சந்திப்பு வரையும் நடைபயணம் நடைபெறவிருக்கிறது.
செப்டம்பர் 10ம் தேதி காலை 6 மணிக்கு முளகுமூடு புனித மேரிஸ் ஐசிஎஸ்இ பள்ளி முதல் சாமியார்மடம் வரையும், காலை 6.30 மணிக்கு சாமியார்மடம் முதல் சிராயன்குழி வரையும், காலை 7 மணிக்கு சிராயன்குழி முதல் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி வரையும் நடைபயணம் நடக்கிறது.
மாலை 3 மணிக்கு மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி முதல் குழித்துறை சந்திப்பு வரையிலும், மாலை 4 மணிக்கு குழித்துறை சந்திப்பு முதல் படந்தாலுமூடு சந்திப்பு வரையும், மாலை 4.30 மணிக்கு படந்தாலுமூடு சந்திப்பு முதல் தளச்சான்விளை வரையும் நடைபயணம் நடக்கிறது. அன்று இரவு செறுவாரக்கோணத்தில் ராகுல்காந்தி ஓய்வெடுக்கவுள்ளார்.
செப்டம்பர் 11-ம் தேதி அங்கிருந்து பாறசாலை வழியாக திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். ராகுல்காந்தி மற்றும் அவருடன் பாத யாத்திரை செல்லும் காங்கிரஸ் அகில இந்திய தலைவர்கள் தங்கவும், ஓய்வெடுக்கவும் வசதியாக வடிவமைக்கப்பட்ட 60 கேர வேன்கள் தயார் நிலையில் உள்ளது.
இந்த கேரவேன்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கேரவேனை ராகுல்காந்தி மற்றும் அவருடன் வருகின்ற தலைவர்கள் பயன்படுத்துவதற்காக பல்வேறு வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
8 9 2022
source https://tamil.indianexpress.com/tamilnadu/rahul-gandhi-india-jodo-yatra-schedule-for-four-days-507002/