சோகத்துடன் பெரியார் மண்ணில் இருந்து பிரிந்து செல்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தொங்கிய ராகுல் காந்தி தொடர்ந்து 4 நாட்களாக தமிழகத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு கேரள மாநிலத்திற்குச் சென்றார்.
தமிழகத்தில் தனது யாத்திரை நிறைவு செய்த அவர் தமிழக எல்லையான தளச்சான் விளையில் இறுதி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் பாஜக நாட்டை பிளவுபடுத்தி வருகிறது. ஊடகங்களையும் இது கையில் எடுத்துள்ளது என்று கூறினார் மேலும் பேசிய அவர் பெரியார் மண்ணிலிருந்து பிரிந்து செல்வதில் வருத்தம் இருப்பதாக தெரிவித்தார். மேலும் பெரியார் மற்றும் நாராயண குரு ஆகிய இவருவரும் ஏழை மக்களுக்கு நன்மை செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.
முன்னதாக கன்னியாகுமரியில் உள்ள முளமூட்டில் இருந்து அவர் யாத்திரையை தொடங்கி மார்த்தாண்டம் சென்றார். அங்கு அவர் மீனவர்களை சந்தித்து பேசினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/sorrow-to-leave-periyar-land-rahul-gandhi-to-kerala-508468/