7 10 2023
திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்டவைகளில் மூன்றாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
2020-ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதாகக் கூறி ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியது.
இந்தச் சூழலில் தான் நேற்று முன்தினம் ஜெகத்ரட்சகனின் வீடு, மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை ஆரம்பித்தனர். மேலும், அவரது உறவினர்கள் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்றது.
சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இதற்கிடையே ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் மூன்றாவது நாளாக இன்றும் ரெய்டு தொடர்ந்து நடைபெறுகிறது. அதன்படி, சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் மற்றும் அடையாறு கஸ்தூரிபா நகர் முதலாவது பிரதான சாலை ஆகிய இடங்களில் அவரது வீடுகளில் ரெய்டு நடைபெறுகிறது.
source https://news7tamil.live/the-raid-continues-for-the-3rd-day-in-more-than-40-places-owned-by-dmk-mp-jagadratshagan.html