வெள்ளி, 25 மார்ச், 2016

​சூரிய வெளிச்சத்தில் தானாகவே துவைத்துக்கொள்ளும் துணி - புதிய கண்டுபிடிப்பு




இனி துணி துவைப்பது மிகவும் சுலமமாகப் போகிறது, ஆம் துணி துவைக்க சோப், டிடர்ஜெண்ட் பவுடர், வாஷிங் மெஷின், மற்றும் அதற்காக செலவிடும் நேரம் உள்ளிட்ட அனைத்தில் இருந்தும் விடுதலை கிடைக்கப்போகிறது.

துணி துவைப்பதில் உள்ள மாற்று முறைகள் குறித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சிக்குழு ஒன்று ஆராய்ந்து வந்தது. அவர்களின் ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கிய விலை குறைந்த நானோ கட்டமைப்பானது, சூரிய ஒளி அல்லது மின்விளக்கின் ஒளி படும் வகையில் துணிகளை காட்டுவதன் மூலம் வெறும் 6 நிமிடங்களில் அதில் உள்ள உயிர்ம அழுக்குகளை போக்கும் வகையில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய ஆராய்ச்சியாளரான ராஜேஸ் ராமநாதன் கூறும் போது, ‘ நாங்கள் கண்டறிந்துள்ள இந்த நானோ தொழில்நுட்பத்தில் உருவான துணிகளை வாஷிங் மெஷினிற்குள் தூக்கி எறியத்தேவையில்லை என்றும் இவைகள் தாமாகவே சுத்தம் செய்து கொள்ளும் திறன்மிக்கது என்றும் தெரிவித்தார்.

இந்த நானோ தொழில்நுட்பத்தில் உருவான துணிகள் அடுத்த தலைமுறைக்கான துணிகள் என்றும் இதனால் துணி வர்த்தகத்தில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்றும் ராஜேஸ் ராமநாதன் தெரிவித்தார்.

இந்த தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக கரிம சேர்மங்கள் மீதான நானோ துணிகளை மேம்படுத்துவதில் முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறுகின்றனர்.