வெள்ளி, 4 மார்ச், 2016

பொடுகு என்பது ?


உடலின் சூடும் தலையிலுள்ள தோல்பகுதிகளுக்கு எண்ணெய் பசையை குறைத்து விடுகின்றன. முடியை சீப்பினால் வாரும்போது வரண்ட தோலிலிருந்து செதில் செதிலாக உரிகின்றது. இதைத்தான் பொடுகு என்று குறிப்பிடுகிறோம். இது தொத்து வியாதியைப் போல பரவுவதுண்டு. தலையிலுள்ள பொடுகு காதுக்குள் பரவி கடும் அரிப்பையும் ஏற்படுத்தலாம். அதனால் பொடுகுள்ளவர்கள் உபயோகிக்கும் சீப்பை மற்றவர் உபயோகிக்கக்கூடாது. தலையைச் சொரிந்த உடனே காதைக் குடைவதும் நல்லதல்ல.
பொடுகை குறைக்கும் வழிகள் ?
சீயக்காய், சோப்பு போன்ற பொருட்கள் தோல் வரட்சியை அதிகமாக்கும் எனவே அதை அடிக்கடி உபயோகிக்க வேண்டாம். அதற்கு பதிலாக வடித்த கஞ்சி, கடலைமாவு, பயறுமாவு, முதலியவைகளில் ஏதேனும் ஒன்றை தண்ணீரில் குழைத்து தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் தோலின் நெய்ப்பும் பதமும் குறையாமல் பாதுகாக்க முடியும். எவ்வளவு எண்ணெய்யைத் தடவினாலும் பொடுகுடன் கூடிய தோல்பகுதி உறிஞ்சிக் கொண்டுவிடும். அதனால் விடாமல் அடிக்கடி தலைக்கு எண்ணெயைத் தடவ வேண்டும்.காளான் இனத்தைச் சேர்ந்த கிருமியால் பொடுகு ஏற்பட்டதாகயிருந்தால் காதுகளில் அரிப்பு, சீழ், இரைச்சல் போன்ற உபாதைகளை உண்டாக்கக்கூடும். உடலிலும் பரவி, படை, சொறி போன்ற தோல் நோய்களும் ஏற்படுத்தக்கூடும். அதனால் சற்று கவனத்துடன் ஆரம்பத்திலேயே பொடுகை தடுப்பது அவசியம்.அருகம்புல்லின் கஷாயத்தில் தேங்காய் எண்ணெய்யுடன் சில மூலிகைகளும் கலந்து காய்ச்சப்படும்.தூர்வாதி கேர தைலம் - ஆயுர்வேத மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் தைலத்தைத் தினமும் தலைக்குத் தடவி மேற்குறிப்பிட்ட கஞ்சி அல்லது மாவை தண்ணீரில் கரைத்து தேய்த்துக் குளித்த வர பொடுகு, அரிப்பு குறைந்துவிடும். உடலில் வரண்ட படையுள்ளவர்களும் இந்த எண்ணெயைத் தேய்த்து வர குணம் தெரியும்.பாலும் மிளகும் அரைத்துச் சுடவைத்துத் தலைக்கு தூர்வாதி கேர தைலம் அரை மணிமுதல் முக்கால் மணி நேரம் வரை ஊற வைத்துக் குளிக்கும் போது தேய்த்து குளிப்பதும் நல்லதே.

Related Posts: