வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

சவுதி அரேபியாவின் அதிரடி நடவடிக்கையால் வேலையிழக்கும் நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் மருத்துவர்கள்! August 08, 2019

Image
பாகிஸ்தானின்  MS (Master of Surgery), MD (Doctor of Medicine) போன்ற மருத்துவ முதுகலை பட்டங்களை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது. முதுநிலை பணியிடங்களுக்கு தேவையான அளவிற்கு பயிற்சி திட்டங்களை இந்த மேற்படிப்புகள் பெற்றிருக்கவில்லை என்பதால் இவற்றை நிராகரிப்பதாக சவுதி அரேபிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது பணியாற்றும் மருத்துவர்கள் போதுமான திறன்களை பெற்றிருக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சவுதி அரேபிய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் மருத்துவர்கள் நாடு திரும்ப தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சவுதி அரேபிய அரசின் நடவடிக்கையை பின்பற்றி இதர அரபு நாடுகளான துபாய், பஹ்ரைன் கத்தார் போன்றவையும் பாகிஸ்தானின் முதுகலை பட்டங்களை நிராகரித்துள்ளன.  இந்த நாடுகளில் பணிபுரிந்து வரும் பாகிஸ்தான் மருத்துவர்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது

credit ns7.tv