வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது - காங். தலைவர் கரண் சிங் August 08, 2019


Image
காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கி வந்த அரசியல் சாசனத்தில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை காங்கிரஸ் மூத்த தலைவரும் காஷ்மீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மன்னர் ஹரி சிங்கின் மகனுமான கரண் சிங் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Sadr-e-Riyasat என்றழைக்கப்படும் காஷ்மீரின் கடைசி பிரதமராகவும், மாநிலத்தின் முதல் கவர்னராகவும் இருந்தவர் கரண் சிங், 88 வயதான இவர் காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையில் பல்வேறு சாதகமான அம்சங்கள் உள்ளன. லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது வரவேற்கத்தக்க ஒன்றாகும் என கரண் சிங் கூறினார்.
மேலும் ஜம்மு காஷ்மீருக்கு விரைவாகவே மாநில அந்தஸ்தை திரும்பத் தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதே போல சிறை வைக்கப்பட்டுள்ள மாநில அரசியல் கட்சித் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் சரண் சிங் கேட்டுக்கொண்டார்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் சரண் சிங்கும் அதில் இணைந்துள்ளார். இருப்பினும், காஷ்மீர் விவகாரத்தில் நேரடி தொடர்புடையவரான சரண் சிங் இதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
காஷ்மீர், எனது மூதாதையர்களால் ஆளப்பட்டது, காஷ்மீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் எனது தந்தை, இந்த மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களுக்கும், அனைத்து பிரிவினரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று சரண் சிங் கூறினார்.
கரண் சிங்கின் தந்தையும் மன்னருமான ஹரி சிங் தான் ஜம்மு காஷ்மீரின் கடைசி மகாராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

credit NS7.tv