வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

வெறும் ஒரு வரியில் செய்தி வெளியிட்ட பத்திரிகை! ஏன் தெரியுமா? August 08, 2019


Image
லெபனான் நாட்டில் வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்று அந்நாட்டு அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பத்திரிகையில் எதுவும் அச்சிடாமல் வெளியிட்டுள்ளது.
லெபனான் நாட்டில் வெளியாகும் ஒரே ஆங்கில நாளிதழ் “தி டெய்லி ஸ்டார்”. இந்த பத்திரிகையின் இன்றைய பதிப்பை வாங்கியவர்களுக்கு ஆச்சர்யம். ஏனெனில் அந்த நாளிதழில் ஒரு பக்கத்தில் ஒரு வரிக்கு மேல் எதுவும் அச்சிடாமல் வெள்ளை பத்திரிகையாக வெளியாகியிருந்தது. லெபனான் நாட்டில் நடக்கும் உள்நாட்டு அரசியல் பிரச்சனை, அரசின் செயல்படாத் தன்மை, பொதுக்கடன் அதிகரிப்பு மற்றும் அந்நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார சூழ்நிலைகளை விளக்கும் விதமான வாசகங்களை ஒற்றை வரியில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
அதோடு, வேலையில்லா திண்டாட்டம், முறைகேடான ஆயுதப் பயன்பாடு மற்றும் அதிகபட்ச மாசுபாடு ஆகியவையும் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது. மேலும் அதன் கடைசி பக்கத்தில் அந்நாட்டின் தேசியச் சின்னமான சிதார் மரத்தை அச்சிட்டு அதன் கீழ் “முன்பே விழித்துக் கொள்ளுங்கள்; ஏற்கனவே தாமதமாகிவிட்டது” என்று அச்சிடப்பட்டுள்ளது.
அரசியல், பொருளாதாரம், நிதி மற்றும் சமூக பிரச்சனைகள் மோசமாகிவிட்டது, ஆனால், நாட்டை காப்பதற்கான நேரம் இப்போதும் இருக்கிறது என்று அந்த நாளிதழின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தி டெய்லி ஸ்டார் நாளிதழின் தலைமை செய்தி ஆசிரியர் நதீம் லட்கி இது குறித்து கூறுகையில், “நாடு சந்திக்கும் பிரச்சனைகளைகளையும், அதை உடனே சரி செய்ய வேண்டிய அவசியத்தையும் நாங்கள் அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

credit ns7.tv