வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்க தனக்கு 72 மணி நேர அவகாசம் போதும் என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மற்றம் பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி தேர்தல் ஆணையத்திற்கு ஆம்ஆத்மி கட்சி கடிதம் எழுதியது. இதற்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதனை அடுத்து பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வாக்குப்பதிவு இயந்திரத்தை எங்களிடம் கொடுங்கள் முறைகேடுகள் இருப்பதை நிரூபித்து காட்டுகிறேன் என சவால் விடுத்திருந்தார். இதற்கு 72 மணி நேரம் கால அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பது, தேர்தல் ஆணையத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவிகிதம் நம்பகமானவை என்பதை நிரூபிக்க, குற்றச்சாட்டு முன்வைப்பவர்களின் சவால்களை ஏற்க தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கெஜ்ரிவால் போன்ற அரசியல் கட்சியினரின் சவால்களை ஏற்க தேர்தல் ஆணையம் விரைவில் நாள் குறித்து, தேதியை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.