வெள்ளி, 7 ஏப்ரல், 2017

தென்னிந்தியர்களை கருப்பர்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய தருண்விஜய்! April 07, 2017


சில நாட்களுக்கு முன் நைஜீரிய மாணவர்கள் இரண்டு பேர் க்ரேட்டர் நொய்டா மாலில் தாக்கப்பட்டனர். அந்த தாக்குதல் குறித்து ஆப்பிரிக்கர்கள் இந்தியாவில் பாதுகாப்பாகதான் இருக்கிறார்களா என்ற கேள்வி பல தரப்பிலிருந்தும் எழுந்தது.

இந்த தாக்குதல் குறித்து அல்ஜஸீரா நடத்திய விவாதத்தில் கலந்து கொண்ட முன்னாள் பாஜக எம்பி தருண்விஜய் “இந்தியர்கள் நிறவெறியர்களாக இருப்பது மிகவும் தீயது. ஏனெனில் நாங்கள் கிருஷ்ணர் போன்ற கருப்புநிறக் கடவுளை வணங்குகிறோம்” என்று கூறினார்.

மேலும், நாங்கள் நிறவெறியர்களாக இருந்தால் எப்படி தமிழர்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மக்கள் என இருக்கும்  தென்னிந்தியர்களோடு இருப்போம். இந்தியாவிலும் கருப்பர்கள் இருக்கிறார்கள், எங்களை சுற்றிலும் அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் சொந்த நாட்டை மறுக்கிறீர்கள் என்றால் நீங்கள் உங்கள் வம்சாவளியை மறுக்கிறீர்கள், உங்கள் கலாச்சாரத்தை மறுக்கிறீர்கள்” என்று பேசினார்.

பாஜகவின் முக்கிய பிரமுகரின் இந்த நிறவெறிப்பேச்சால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவருக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது

Related Posts: