திங்கள், 24 டிசம்பர், 2018

இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை December 24, 2018

Image
source ns7tv

மேகதாது, ஸ்டெர்லைட் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறை சார்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.  கூட்டத்தில் ஸ்டெர்லைட் பிரச்சினையில் அடுத்தக் கட்டமாக தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து விவாதித்து, முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இது தவிர மேகதாது அணை விவகாரம், 7 பேர் விடுதலை, சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து, ஜனவரி 3-வது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.