source ns7.tv
வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருச்சக்கர வாகனங்களை தீயிட்டு எரித்த சமூக விரோதிகளை பள்ளிகரணை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை பள்ளிகரணை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகர் 8-அடுக்கு குடியிருப்பு பகுதியில் 48-வது பிளாக் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே நிறுத்தி
வைத்திருந்த தீபக் (29), ராஜா (29) ஆகியோரது இருச்சக்கர வாகனத்தை அப்பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் தீயிட்டு எரித்து தப்பியோடியுள்ளனர்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் தீபக், ராஜா ஆகியோர் அவர்களது இருச்சக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்தி வைத்துவிட்டு வீட்டுக்கு உறங்க
சென்றுள்ளனர்,
அப்பகுதியில் கஞ்சா மற்றும் மது குடித்து விட்டு போதையில் வந்த மர்ம நபர்கள் சிலர் இரண்டு இருச்சக்கர வாகனங்களை தீயிட்டு எரித்து தப்பியோடியுள்ளனர், இன்று காலை தீபக் மற்றும் ராஜா வழக்கம் போல் பணிக்கு செல்ல இருச்சக்கர வாகனங்களை பார்க்கும் போது வாகனம் முற்றிலும் தீயில் எரிந்து கருகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து பள்ளிகரணை காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்நிலையில், தகவலின் பேரில் வந்த பள்ளிகரணை போலீசார் அப்பகுதியில் சந்தேகத்திற்க்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடைப்பெறுவதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்படும் படி பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.