திங்கள், 24 டிசம்பர், 2018

"மத்திய அரசு கஜா புயல் நிவாரணத்தொகையை முழுமையாக வழங்கவில்லை" : ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு December 24, 2018

Image
source ns7tv
கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு இரண்டு மாத காலமாகியும், மத்திய அரசு முழுமையான நிவாரணத்தொகை வழங்கவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். 
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், ஜி.கே.வாசன் பங்கேற்று பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், சிறுபான்மை மக்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றும் பல மாநிலங்களில் சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். 
மேலும், தை பிறந்தவுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் எனவும் ஜி.கே.வாசன் குறிப்பிட்டார்.

Related Posts: