அமெரிக்காவின் முன்னாள் ரகசிய சி.ஐ.ஏ அதிகரி ஒருவர், டொனால்ட் ட்ரம்பை வெளியேற்றுவதற்காக ட்விட்டரை விலைக்கு வாங்க நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார்.
இந்திய பிரதமர் மோடியைப் போலவே ட்விட்டரில் படு ஆக்டிவாக இருப்பவர் அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப். அமேசான் நிறுவனம் சிறுவியாபாரிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது எனவும் இதனால் பலர் வேலை வாய்ப்பை இழக்கிறார்கள் எனவும் ஒரு ட்வீட்டை போட்டார் ட்ரம்ப். இதையடுத்து இ-மார்கெட்டின் ஜாம்பவானான அமேசானின் வருவாயில் அதிரடியாக 5.7 பில்லியன் டாலர் குறைந்தது. இதேபோல் பத்திரிகையாளர்களுக்கு எதிராக தடாலடியாக பதிவிடுவது, வடகொரியாவை வம்பிழுப்பது என தினமும் ஒரு சர்ச்சையை கிளப்பி வருகிறார் டொனால்ட் ட்ரம்ப்.

அதுமட்டுமல்லாமல் ட்விட்டரை விலைக்கு வாங்கி ட்ரம்பை வெளியேற்றுவதற்காக பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரமும் மேற்கொண்டுள்ளார் வில்சன். இந்த பிரச்சாரத்தின் மூலம் இதுவரை 6 லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளார். விரைவில் 100 கோடி ரூபாய் நிதி திரட்டி ட்விட்டரை விலைக்கு வாங்கி, ட்ரம்பின் ட்விட்டரை கணக்கை நீக்கவுள்ளதாகவும் பகீர் கிளப்பி வருகிறார் வில்சன்.