பாஜக வேட்பாளர் வேத் பிரகாஷைவிட ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ராம் சந்தர் 24,052 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தத் தொகுதியில் முன்பு ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்தான் வேத் பிரகாஷ்.
பிறகு ஆம் ஆத்மியிலிருந்து விலகினார் , பதவியையும் துறந்தார். பாஜகவில் சேர்ந்தார்.
அதனால் வந்த இடைத்தேர்தல் இது...
அதே வேத் பிரகாஷ் அதே தொகுதியில் இப்போது பாஜக சார்பாகப் போட்டியிட்டார்(என்ன கொடுமை குமார் இது)
தொகுதி மக்கள் சாட்டையடித் தீர்ப்பு அளித்துவிட்டார்கள்.
வேத் பிரகாஷ் மண்ணைக் கவ்வினார். வடை போச்சே கதைதான்..
ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கெஜ்ரிவால் முகத்தில் பளீர் சிரிப்பு...
-சிராஜுல்ஹஸன்
-சிராஜுல்ஹஸன்